fbpx

பிடிச்சிருக்கா..? இல்லையா..? பூர்ணிமாவிடம் ஓபனாக கேட்ட விஷ்ணு..!! அவர் என்ன சொன்னார் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது ஏராளமான ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதற்கு காரணம் இந்த சீசனில் அதிகமான இளைஞர்களை பார்க்க முடிகிறது. அதன்படி, பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக இருந்தாலும் டாஸ்க் என்று வரும் போது சரியான முறையில் விளையாடி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் மோதல் மட்டுமின்றி காதலும் தலை தூக்கியுள்ளது. ஏற்கனவே 2 ஜோடிகள் வலம் வரும் நிலையில், தற்போது மற்றுமொரு காதல் ஜோடி புதிதாக மலர்ந்துள்ளது. அதன்படி, பூர்ணிமாவுக்கு அவ்வப்போது தூண்டில் விட்டு பார்த்த விஷ்ணு நேற்று பூர்ணிமாவுடன் தனியாக உட்கார்ந்து பேசும் போது ‘இன்டெர்ஸ்ட் இருக்கா இல்லையா? ‘ என கேட்கிறார்.

அதற்கு பூர்ணிமா குனிந்த தலை நிமிராமல் தரையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு விஷ்ணு ‘என்ன எதாவது சொல்லு’ என கேட்கிறார். இதையடுத்து, ஹாலில் இருந்த அக்‌ஷயாவுடன் பேச்சுக் கொடுக்க முயன்ற பூர்ணிமாவை ‘என்ன கவனத்தை திசை திருப்புறீயா? இல்ல மறைக்கிறீயா?’ என்று விஸ்ணு கேட்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டுமா..? இனி ஈசியா நீங்களே பண்ணலாம்..!!

Thu Nov 2 , 2023
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் அடிக்கடி பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட அப்டேட்டுகளை செய்திருக்க வேண்டும். அதனை ஆன்லைன் மூலம் எளிதில் செய்து விடலாம். இதற்கு முதலில் தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் […]

You May Like