fbpx

ஒரு விழாவா சிறப்பிக்க வந்தா இப்படியா? கடலூர் வந்த டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு!!!

திரைப்பட இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎப் வாசன் கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதிக்கு இன்று வந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் ஏராளமான அவரது ரசிகர்கள் குவிந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள், கார்களில் அதிகப்படியான ஒலி எழுப்பி, போக்குவரத்து நேரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தியுள்ளனர் டிடிஎப் வாசனை காணவந்த ரசிகர்கள். இதன் காரணமாக அந்த அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. அப்போது வாகனங்களை அப்புறப்படுத்த கோரி ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தும் யாரும் கண்டு கொள்ளாமல் போக்குவரத்திற்கு இடையூராக செயல்பட்டுள்ளனர். இதனால் அவர்களை போலீசார் விரட்டி அடித்துள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி முடிந்து டிடிஎப் வாசன் புறப்படும் போதும் இதேபோன்று ரசிகர்கள் போக்குவரத்து நேரிசல் ஏற்படுத்தியுள்ளனர். மேலும், வாகனங்களில் ஒலி எழுப்பியவாரு சென்றவர்களால் விபத்தும் நடந்துள்ளதாக் தெரிவிக்கப்டுகிறது. இதனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், அளவுக்கு அதிகமாக கூட்டத்தை கூட்டுதல், காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்று 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போன்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Kathir

Next Post

இரண்டாம் இடத்தில் எலான் மஸ்க்!!! முதல் இடம் பிடித்த உலக பணக்காரர் யார் தெரியுமா?

Wed Dec 14 , 2022
போர்ப்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ளது, அதன்படி இதுவரை முதல் இடத்தை பிடித்து வந்த டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ, எலான் மஸ்க்-ஐ பின்னுக்கு தள்ளி எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட், 191 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 73ஆகும். கடந்த திங்கள் கிழமை டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவின் காரணாமாக, 4 சதவீதம் வீழ்ச்சியை […]

You May Like