இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேசியக்கொடி திடீரென அறுந்து விழுந்ததால், கோபமடைந்த திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன், அங்கிருந்த ஊழியரை அடிக்கப் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுதந்திர தினத்தை ஒட்டி கும்பகோணம் டவுன்ஹாலில்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டார். கொடியை ஏற்றுவதற்காக கயிற்றை அவர் பிடித்து மேலே இழுத்த போது பறக்க வேண்டிய கொடி, திடீரென கயிற்றிலிருந்து அறுபட்டு கீழே விழுந்தது. இதனால், கவனக்குறைவாக ஊழியர்கள் செயல்பட்டதாக எண்ணி அவர்கள் மீது எம்.எல்.ஏ. தனது கோபத்தை கொட்டினார். ஒரு கட்டத்தில் அடிக்கவும் கையை ஓங்கிவிட்டார். இதற்கிடையே, மீண்டும் அவசரமாக சரிசெய்யப்பட்டு தேடியக்கொடி ஏற்றப்பட்டது.
மீடியாக்கள் முன்னிலையில் கொடி கூட ஏற்றத் தெரியவில்லை என தன்னை திட்டமிட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாரேனும் கொடியை சரியாக கட்டாமல் விட்டிருந்தார்களா அல்லது எதேச்சையாக நடந்ததா? என அன்பழகன் எம்.எல்.ஏ. விசாரித்து வருகிறார்.