எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கும் வீடுகளிலும் துரதிருஷ்டவசமாக விபத்து ஏற்படும்பட்சத்தில் ரூ 50 லட்சம் வரை காப்பீடு தொகையைப் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
எரிவாயு சிலிண்டர்கள் இப்போது அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருளாகிவிட்டது. நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஒரு எரிவாயு சிலிண்டர்களை கையாள்வதில் ஒரு சிறு தவறு கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதனால் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல விபத்து ஏற்படும்போது முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கும் வீடுகளிலும் துரதிருஷ்டவசமாக விபத்து ஏற்படும்பட்சத்தில் ரூ 50 லட்சம் வரை காப்பீடு தொகையைப் பெறலாம் என்பது பலருக்கு தெரியாது. அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். இந்த காப்பீட்டு தொகையை பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி சிலிண்டர் பைப், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர் ஆகியவை அனைத்தும் ஐஎஸ்ஐ முத்திரை உள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு தொகை வழங்கப்படும். அதனைப் போலவே விபத்து நடந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய எல்பிஜி நிறுவனம் மற்றும் காவல் நிலையத்திற்கு விபத்து தொடர்பாக தகவல் தெரிவித்து இருக்க வேண்டும்.
காப்பீடு தொகை குறித்து கோரிக்கை வைக்கும் போது நிறுவனத்திற்கு விபத்துக்கான எஃப் ஐ ஆர் நகல், மருத்துவ ரசீது, மருத்துவமனை பில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சிலிண்டர் யாருடைய பெயரில் உள்ளதோ அவருக்கு மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும். இந்த நிபதனைகளை பூர்த்தி செய்துள்ள நபர்களுக்கு மட்டுமே 50 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; கள்ளக்குறிச்சியில் 4 பேர் இறந்த விவகாரம்!! சாராய வியாபாரி கைது!!