fbpx

இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? தூக்கத்தில் கூட உடல் எடையை குறைக்கலாம்..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

உடல் பருமன் தான் பல நோய்களுக்கும் மூலக் காரணமாக இருக்கிறது. ஆனால், உடல் எடையை சரியாக பராமரிப்பது அவ்வுளவு எளிதானதல்ல. பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சி எடுத்தாலும் கூட அதை தொடர்ந்து கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் இரவில் தூங்கும் போது கூட, உங்கள் உடல் எடையை குறைக்க வழி உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? அதற்கு முதலில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தினசரி சரியான பழக்கத்தை கடைபிடித்தால் உடல் எடையை தூங்கும் போது கூட குறைக்க முடியும்.

தூங்கும் போது கூட உடல் எடையை குறைப்பதற்கு ஏதாவது அதிசய பானம் இருக்கிறதா என்ன? ஆம் நிச்சியம் இருக்கிறது. அதை தினமும் நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இந்த பானங்கள் உங்கள் உடலுக்கு நல்ல ஓய்வை கொடுத்து, இதமளித்து, செரிமானத்திற்கு உதவி செய்து, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. அப்படியான சில ‘அதிசிய’ பானங்கள்.

மஞ்சளில் சர்குமின் என்ற கலவை உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது ஆகும். சூடான மஞ்சள் பாலில் கொஞ்சமாக கருப்பு மிளகு சேர்த்து குடித்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. மஞ்சளில் உள்ள சர்குமின் உடலில் உறிஞ்சப்படுவதை கருமிளகு அதிகப்படுத்துகிறது. இரவில் படுக்கும் போது ஒரு கிளாஸ் சூடான பால் குடிப்பதால், நம் மனதிற்கு இனிமையும் இதத்தையும் அளிக்கிறது. நாள் முழுதும் உழைத்து களைப்பாக வருபவர்கள், இரவு நேரத்தில் பால் குடித்தால் சற்று இதமாக இருக்கும். சிலர் இந்தப் பாலோடு கொஞ்சம் இலவங்கப்பட்டை அல்லது தேன் சேர்த்து குடிப்பார்கள். இது கூடுதல் கலோரி இல்லாமல் நல்ல சுவையை நமக்கு தருகிறது.

டார்க் சாக்லேட்டோடு சேர்த்து கொஞ்சம் ஜாதிக்காய் மற்றும் இலவங்கப்படையை சேர்த்து குடித்தால், நமது மெட்டபாலிஸம் தூண்டப்படுகிறது. மேலும் இது நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது. சாக்லேட்டில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் எடையை பராமரிக்க நன்றாக உதவுகிறது. சூடான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை கலந்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது இரவு தூங்குவதற்கு முன்போ குடித்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். செரிமானம் மேம்படும். மேலும், எலுமிச்சை பழத்தில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.

Read More : 48 மணி நேரத்திற்குள் ரத்த வாந்தி எடுத்து 53 பேர் மரணம்..!! காங்கோவில் தீயாய் பரவும் மர்ம நோய்..!! அறிகுறிகள் இதுதான்..!!

English Summary

If you follow a healthy lifestyle and proper daily habits, you can lose weight even while sleeping.

Chella

Next Post

ரூ.175, ரூ.445 விலையில் ஜியோ டிவி பிரீமியம் திட்டங்கள் அறிமுகம்!. அசத்தல் சலுகைகள்!. என்னென்ன தெரியுமா?

Thu Feb 27 , 2025
Jio TV Premium Plans Launched at Rs.175 and Rs.445! Amazing Offers! Do you know what they are?

You May Like