fbpx

Book Now.. Pay Later | இனி பணம் இல்லனாலும்.. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..!! – இரயில்வே அசத்தல் அறிவிப்பு

பொதுவாக பலர் ரயில்களில் பயணம் செய்ய முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். ஆனால் ஐஆர்சிடிசி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள புக் நவ்.. பே லேட்டர் திட்டத்தில் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் போது உங்களிடம் பணம் இல்லை என்றால், அது பெரிய பிரச்சனையாக இருக்காது.

பே லெட்டர் திட்டத்தின் மூலம் பயணிகள் எந்தவித முன்பணமும் செலுத்தாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால் டிக்கெட் தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் செலுத்தினால் கூடுதல் கட்டணம் இல்லை. தாமதமாக பணம் செலுத்தினால் 3.5% சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டம் பயணத்தின் நிதிச்சுமையை தற்காலிகமாக குறைக்கும். அவசர பயணங்கள் மற்றும் கடைசி நிமிட முன்பதிவு குறித்து பயணிகள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. பணம் இல்லாவிட்டாலும் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

பே லேட்டர் வசதியைப் பெறுவதற்கு முன், ரயில் பயணிகள் www.epaylater.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். IRCTC கணக்கில் உள்நுழைந்த பிறகு.. ‘Book Now’ என்பதைக் கிளிக் செய்து தேவையான விவரங்களை உள்ளிடவும். பின்னர் பேமென்ட் பக்கத்தில் பே லேட்டர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டை எளிதாக பதிவு செய்யலாம்.   

Read more ; தொப்பை கொழுப்பு கரையும்.. இதய நோய்களை தடுக்கும் ஜப்பானிய சீக்ரெட் பானம்.. வீட்டில் எப்படி செய்வது?

English Summary

Did you know you can book a train ticket even if you don’t have money?

Next Post

பதவிக்கு லஞ்சமா..? எச்சரித்த விஜய்..!! வெளியேற்றப்பட்ட புஸ்ஸி ஆனந்த்..!! தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு..!!

Fri Jan 24 , 2025
Vijay has issued this warning amid allegations that he is demanding Rs. 15 lakh to get a party position.

You May Like