ஆவடியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் நாசர் படுத்துக்கொண்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ராட்சத குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ராட்சத குழாயில் வால்வு உடைந்ததை உறுதி செய்ய தரையோடு தரையாக படுத்து ஆய்வு மேற்கொண்டார். பின்பு, அதிகாரிகளிடம் விரைவில் இதனை சரிசெய்யுமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, அமைச்சர் நாசர் தரையோடு தரையாக படுத்து ஆய்வு மேற்கொண்ட வீடியோவை பின்னணி பாடலுடன் ஒப்பிட்டு திமுகவினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.