fbpx

சென்னையில் டீசல் தட்டுப்பாடு..! பெட்ரோல் பங்க்குகளின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

சென்னையில் பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் கையிருப்பு இல்லை என்ற பலகைகளால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எதிர்கொண்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்ட போதும் கணிசமான அளவு விலை குறையவில்லை. அதேநேரத்தில் கடந்த 107 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. சென்னையில் 107-வது நாளாக இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் டீசல் தட்டுப்பாடு..! பெட்ரோல் பங்க்குகளின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் இன்று காலை முதல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் கையிருப்பு இல்லை என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. டீசல் தட்டுப்பாடு திடீரென ஏற்பட்டதால், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்ட தடை, தாமதம் ஆகியவற்றால் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Chella

Next Post

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்..

Mon Sep 5 , 2022
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.. மேலும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 […]
முதல்வருக்கு உடல்நலக்குறைவு..! அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..! மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்..!

You May Like