fbpx

கட்டிட வேலைக்கு செல்வர்களுக்கு சிரமம்..!! இனி காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறப்பு..? அமைச்சர் சொன்ன தகவல்..!!

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினசரி விற்பனை சுமார் 25 விழுக்காடு குறைந்தது. இதேபோல கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பாக்கெட் மதுவிற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது விற்பனை குறையவில்லை என்றார். அந்த கடைகளை பயன்படுத்தியோர் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். பார் உரிமம் உள்ளவர்கள் மட்டுமே அதை, உரிய வழிகாட்டுதல்களுடன் நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும், “காலை 7 மணி முதல் 9 மணி வரை கட்டடம் உள்ளிட்ட வேலைகளுக்கு செல்பவர்கள் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று நாங்கள் போகிற இடமெல்லாம் கோரிக்கை வைக்கிறார்கள். அதுபற்றி ஆலோசித்து வருகிறோம். இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை” என்றார்.

Chella

Next Post

என்னது நான் பன்னியா..? உன்னை சும்மா விட மாட்டேன்..!! ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட ஜிபி முத்து..!!

Tue Jul 11 , 2023
டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவர் உச்சரிக்கும் செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தை மூலம் தமிழ்நாடு மக்கள் இவரை மிகவும் விரும்பி ரசித்தனர். இவர், தனக்கென்று சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறாக டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தொடர்ந்து குவிந்து வருகிறது. அந்தவகையில் வெற்றி, ஷிவானி நாராயணன் […]

You May Like