fbpx

மின் கணக்கீடு செய்வதில் சிரமம்!… அரசு புதிய அறிவிப்பு!… அதிர்ச்சியில் மக்கள்!

மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மிக்ஜம் புயலின் கோரத்தாண்டவம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன. இதன்காரணமாக, அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு 18-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் அக்டோபர் மாதம் பொதுவாக மின் கட்டணம் இரண்டு மடங்கு உயரும். தற்போது, அந்த கட்டணத்தின் கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்த உத்தரவிட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Kokila

Next Post

அதிரப்போகும் அலங்காநல்லூர்..!! ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்..!! என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா..?

Thu Dec 14 , 2023
ஜல்லிக்கட்டு விளையாட்டில் பலர் உயிரிழந்தாலும் இந்த விளையாட்டின் ஆர்வமும், விறுவிறுப்பும் குறையாமல் பல தடைகளை தாண்டி நடந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையின்போது நடக்கிறது. ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலக பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. தற்போது […]

You May Like