fbpx

பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு டிஜிலாக்கர் கட்டாயம்..!! இன்று முதல் அமல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு டிஜிலாக்கர் (DigiLocker) என்னும் ஆப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு பல்வேறு நடைமுறைகள் மற்றும் விதிகள் கடைபிடிக்கப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது ஆவணங்கள் சரிபார்ப்பு தான். ஏனென்றால், நீங்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய பிழை இருந்தாலும் அதற்காக நாள்கணக்காக அலைய வேண்டியிருக்கும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு பாஸ்போர்ட் சரியான நேரத்தில் கிடைக்கும்.

இந்த நடைமுறையை டிஜிட்டல் முறையில் எளிதாக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், புதிய விதிகளையும் அவ்வபோது அமல்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருவதால், அதனை தடுக்கும் விதமாகவும், பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காகவும் இந்தியாவில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் புதிய விதி கொண்டு வரப்படுகிறது. அதன்படி, பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு டிஜிலாக்கர் (DigiLocker) என்னும் ஆப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மூலம் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்யும்போது, உங்களிடம் டிஜிலாக்கர் ஆப் இருப்பது கட்டாயம். அதில், உங்களது பாஸ்போர்ட்டுக்கு தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த புதிய விதி மூலம், நீங்கள் முகவரி அல்லது பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் கார்டை சமர்ப்பிக்க விரும்பினால், கட்டாயம் டிஜிலாக்கர் அக்கவுன்ட்டை ஓப்பன் செய்து, அதில் வெரிபிகேஷன் செய்திருக்க வேண்டும்.

இந்த டிஜிலாக்கர் ஆப்பில், பதிவேற்றம் செய்து வெரிஃபிக்கேஷன் ஆகிவிட்டால், பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு செல்லும்போது, அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. இதனால், பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் குறைக்கப்படும்.

Chella

Next Post

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை சீரழித்த கேரள வாலிபர்…..! நீதிமன்றம் வழங்கிய அதிரடி……!

Sat Aug 5 , 2023
தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருக்கின்ற பல்வேறு குடும்பங்களில் இருக்கின்ற பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் வறுமையின் காரணமாக, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு சென்று அங்கே வேலை பார்த்து, தங்களுடைய குடும்பங்களை கவனித்து வருகிறார்கள். அப்படி பிழைப்பு தேடி வெளியூருக்கு வரும் சிறுமிகள் மற்றும் பெண்களை குறி வைத்து, சில கயவர்கள் ஏமாற்றி, அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இது போன்ற நபர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக […]

You May Like