ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட்களை பதிவு செய்த சாதனையை நேற்று சமன் செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அணிக்கு எதிரான இன்றய போட்டியில் தினேஷ் கார்த்திக் தனது 16வது டக் அவுட்டை பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட்களை பதிவு செய்த சாதனையை சமன் செய்தார். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஐபிஎல் வரலாற்றில் 16 டக் அவுட்களை பதிவு செய்துள்ளார். அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்தி இன்று 16-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.