2025ஆம் ஆண்டில் உலக அளவில் என்ன நடக்கும்..? இயற்கை பேரிடர்கள் ஏற்படுமா..? என்பது குறித்து பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளார்.
அதாவது, 2025இல் மூளை அலைகளைப் பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். போன் மூலம் பேசாமல் நேரடியாக மூளை அலைகள் மூலம் பேசும் முறையை கொண்டு வருவார்களாம். இது மக்கள் தொடர்பு கொள்ளும் முறையை முற்றிலும் மாற்றும் என்று கூறியுள்ளார். அதேபோல், வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு பற்றியும் பேசியுள்ளார்.
சூப்பர் பவுல் அல்லது ஒலிம்பிக் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வின் போது இந்த தொடர்பு ஏற்படலாம் என்றும் இந்த நிகழ்வு மனித குலத்திற்கும், அறிவியலுக்கும் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என்று கூறியுள்ளார். மேலும், முக்கிய நிகழ்வு ஒன்றின் போது நேரடியாக ஏலியன் உடன் நாம் தொடர்பு கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், 2025இல் விஞ்ஞானிகள் மனித உறுப்புகளை ஆய்வகங்களில் வளர்க்க முடியும். இது மருத்துவத் துறையில் பெரும் புரட்சியாக இருக்கும். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் என்று தெரிவித்துள்ளார். 2025இல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து அட்டாக் செய்யும் என்றும் இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளும் என்று எச்சரித்துள்ளார்.
Read More : கடனை வசூலிக்க சென்றவருக்கு இப்படி ஒரு நிலைமையா..? வீட்டிற்குள் வெறியோடு காத்திருந்த பெண்கள்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!