fbpx

Tax: 2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் ரூ.19.58 லட்சம் கோடி…!

2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள், முந்தைய நிதியாண்டில் அதாவது 2022-23 நிதியாண்டில் வசூலான ரூ .16.64 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது நிகர வசூல் ரூ.19.58 லட்சம் கோடியாக உள்ளது, இது 17.70% அதிகரித்துள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய்க்கான பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ.18.23 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, அவை திருத்தப்பட்டு, திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ரூ.19.45 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்காலிக நேரடி வரி வசூல் பட்ஜெட் மதிப்பீட்டை விட 7.40% மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 0.67% அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் மொத்த வசூலான ரூ.19.72 லட்சம் கோடியைவிட 18.48% வளர்ச்சியைக் காட்டுகிறது.

2023-24 நிதியாண்டில் மொத்த கார்ப்பரேட் வரி வசூல் ரூ.11.32 லட்சம் கோடியாக உள்ளது மற்றும் முந்தைய ஆண்டின் மொத்த கார்ப்பரேட் வரி வசூலான ரூ.10 லட்சம் கோடியை விட 13.06% வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் நிகர கார்ப்பரேட் வரிவசூல் ரூ.9.11 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் நிகர கார்ப்பரேட் வரி வசூலான ரூ.8.26 லட்சம் கோடியை விட10.26% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

Vignesh

Next Post

" எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்துக்கொள்ள முடியும்" - மத்திய அரசு சொல்லும் விதிகள் என்ன?

Thu Apr 25 , 2024
வீடுகளில் நாம் தங்க நகைளை வைத்துக்கொள்ள சில விதிகள் உள்ளன. எவ்வளவு தங்கம் வரை வைத்துக்கொள்ளலாம், அதிலும் யார் யார் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். திருமணம் அல்லது பண்டிகை நாட்களில் நாம் தங்க நகைகளை வாங்குவோம். தங்க நகைகளை விரும்பி அணிவதற்கு வாங்கினாலும் பெரும்பாலானோர் முதலீடுக்காகத் வாங்குகின்றனர். ஆபத்து நேரத்தில் கைக்கொடுக்கக் கூடியது தங்க நகைகள்தான். நீண்ட ஆண்டுகளாக தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி […]

You May Like