மார்ச் 10ம் தேதி வரையிலான 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் குறித்த தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன.
இந்தியாவில் மார்ச் 10 வரையிலான மொத்த நேரடி வரி வசூல், வசூல் ரூ. 16.68 லட்சம் கோடி இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 22.58% அதிகம். இந்த வசூல் மொத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 96.67% ஆகும். 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இது 83.19% ஆகும்.
மொத்த வருவாய் வசூல் அடிப்படையில் கார்ப்பரேட் வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்த வரையில், சிஐடியின் வளர்ச்சி விகிதம் 18.08% ஆகவும், பிஐடியின் வளர்ச்சி விகிதம் 27.57% ஆகவும் உள்ளது. பணத்தைத் திரும்பப்பெறுதலைச் சரிசெய்த பிறகு, சிஐடி வசூலில் நிகர வளர்ச்சி 13.62% ஆகவும், பிஐடி வசூலில் 20.73% (பிஐடி மட்டும்)/ 20.06% ஆகவும் உள்ளது.
ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 10, 2023 வரை ரூ.2.95 லட்சம் கோடி ரீபண்ட் மூலம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்டதை விட இது 59.44% அதிகமாகும்.