fbpx

’பிதாமகன் தயாரிப்பாளரை மோசமான நிலைக்கு தள்ளிய இயக்குனர் பாலா’..!! புட்டு வைத்த முக்கிய புள்ளி..!!

பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு இயக்குனர் பாலா செய்த துரோகம் குறித்து, பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”அந்த சமயத்தில், சின்ன சின்ன பட்ஜெட் திரைப்படங்களை வி.ஏ.துரை தயாரித்து வந்தார். இதற்கிடையேதான், அவர் இயக்குநர் பாலாவின் திரைப்படங்களை பார்க்கிறார். இந்த இயக்குநர் வித்தியாசமாக படம் எடுக்கிறாரே என்று அவரை அழைத்து, தனக்கு படம் ஒன்றை இயக்கி தருமாறு கமிட் செய்துள்ளார். அந்த திரைப்படம்தான் ‘பிதாமகன்’.

வி.ஏ.துரைக்கு பாலாவை கமிட் செய்த பின்னர்தான், அவரைப்பற்றி தெரிந்தது. படப்பிடிப்பில், தினமும் காசை தண்ணீராக செலவழிக்க வைத்தார் பாலா. பாலாவின் குணம் பற்றி சினிமாத்துறைக்கே தெரியும். படப்பிடிப்பில் பாலாவுக்கும், இவருக்கும் ஏகப்பட்ட சண்டைகள் நடந்தன. அது போன்ற தருணங்களில் எல்லாம் பொறுமையாக இருந்து, எப்படியாவது படத்தை முடித்து விட வேண்டும் என்று நினைத்தார் வி.ஏ. துரை. இறுதியில் அந்தப்படத்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

கடைசியில் போட்ட பட்ஜெட்டைத் தாண்டி, படத்திற்கு பெரிய செல்வாகி விட்டது. இருப்பினும், இப்போதாவது படம் முடிந்ததே என்று பெருமூச்சு விட்டார் வி.ஏ.துரை. ஆனால், இறுதியாக படத்தை பாலா காண்பித்த போது, துரைக்கு படத்தின் மீது பெரும் நம்பிக்கை வந்து விட்டது. காரணம், படம் அந்தளவுக்கு மிகவும் நன்றாக இருந்தது. படத்தை பார்த்த பிரமிப்பில் இருந்த துரை, பாலா வேறு எந்த தயாரிப்பாளரிடமாவது சென்று விட போகிறார் என்று நினைத்து அப்போதே அவரிடம் ஒரு குறிப்பிடத் தொகையை அட்வான்ஸாக கொடுத்து அடுத்த படத்தையும் தனக்கே செய்யுபடி கமிட் செய்திருக்கிறார்.

பாலாவும் அதனை வாங்கிகொண்டு ஓகே என்று சொல்லி இருக்கிறார். பிதாமகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் நடித்த சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கு பெரிய பெயர் கிடைத்தது. இயக்குநரையும் கோலிவுட் கொண்டாடியது. ஆனால், படத்தின் கலெக்‌ஷன் செலவு செய்த தொகையை எடுத்ததா? என்றால் அது கேள்விக்குறிதான். பின்னர் துரை எடுத்த படங்கள் தோல்வி படங்களாக மாற, பாலாவை ஏற்கனவே கமிட் செய்த படம் குறித்து கேட்க போனார். பாலாவிடம் இருந்து அதற்கு பதிலே இல்லையாம். அதனை தொடர்ந்துதான் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என துரைக்கு புரிந்து இருக்கிறது” என்றார்.

Chella

Next Post

இசை கச்சேரியை நோக்கி பாய்ந்த ஏவுகணை..!! காதலன் கண்முன்னே காதலியை..!! உச்சக்கட்ட கொடூரம்..!! 260 சடலங்கள்..!!

Mon Oct 9 , 2023
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற திட்டம் போட்டு வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே, கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் தாக்குதல்களை […]

You May Like