fbpx

TEENZ -க்கு நல்ல வரவேற்பு கிடைக்கலன்னா சினிமாவ விட்டு விலகி.. கண்காணா இடத்திற்கு போயிருப்பேன்..!! –  பார்த்திபன் உருக்கம்

ஒத்தசெருப்பு சைஸ் 7 படத்தைத் தொடர்ந்து இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து டீன்ஸ் படத்தை இயக்கிய பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. பிரபாஸ் நடித்த கல்கி AD திரைப்படம், இந்தியன் 2 என பிரம்மாண்ட படத்திற்கு மத்தியில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்

”Friends  சத்தியமா சொல்றேன்… TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்ன, நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே.

இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thoughtஇல் எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.

நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு

வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.

நனைந்த இமைகளோடு இராதாகிருஷ்ணன் பார்த்திபன்”என்று இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Read more | 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்..!! உலகின் நம்பர் ஒன் தலைவரானார் பிரதமர் மோடி!! எக்ஸ் தளத்தில் புதிய சாதனை..

English Summary

Director Parthiban has posted on X page to thank the fans for their support for Teens.

Next Post

Alert: அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்... தமிழகம் முழுவதும் கண்காணிப்பை தீவிர படுத்த உத்தரவு...!

Mon Jul 15 , 2024
Tamil Nadu health department has issued guidelines for fever and dengue fever.

You May Like