fbpx

ரஜினி, கமல், அமிதாப் பச்சன் மூவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் மரணம்..!! திரையுலகினர் இரங்கல்..!!

பாலிவுட்டில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து படம் இயக்கிய பிரயாக் ராஜ் மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் மிக பிரசித்தி பெற்ற திரை எழுத்தாளரும், நடிகரும் ஆவார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மூவரும் இணைந்து நடித்த கெராஃப்தார் படத்தை இயக்கியவர் இவர்தான். அதன்பின் ரஜினி, ஸ்ரீதேவியை வைத்து ‘கைர் கானூனி’ படத்தையும் அவர் இயக்கியிருந்தார்.

கெராஃப்தார் திரைப்படம் 1985ஆம் ஆண்டு பிரயாக் ராஜ் இயக்கிய இந்தி மொழி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை எஸ்.ராமநாதன் தயாரித்திருந்தார். இதில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன், மாதவி, பூனம் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் அமிதாப் பச்சனின் நண்பராக ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது திரைப்படமாகும். மேலும், இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Chella

Next Post

தேசிய மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு....! உடனே அணுகுங்கள்....!

Mon Sep 25 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பை, நாம் வெளியிட்டு வருகிறோம். இதனை பார்த்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பலர் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில், நீங்களும் நம்முடைய செய்தி நிறுவனத்தை பின் தொடர்ந்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இன்றைய தினம் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து, வெளியாகியிருக்கின்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி, நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த நிறுவனத்தில், CEO, computer operator, […]

You May Like