படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தினால் இயக்குனர் சுதா கொங்கரா காயமடைந்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020இல் வெளியான படம் சூரரைப்போற்று. கொரோனா காலகட்டத்தில் இந்த படம் வெளியானதால் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை சுதா கொங்காரா பெற்றார்.
இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படப்பின் போது இயக்குனர் சுதா கொங்கராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் வலிமிகுந்ததாக உள்ளது. ஒரு மாத காலத்திற்கு இடைவேளை எடுத்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.