fbpx

இயக்குநர் தரணியை பார்க்க நோ சொன்ன விஜய்! கில்லி ரீ-ரிலீஸ்க்கு பிறகு ட்விஸ்ட்!

கில்லி பட இயக்குநர் தரணியை சந்திக்க வாய்ப்பு வழங்காமல் இருந்த நடிகர் விஜய், ரீ-ரிலீஸ்க்கு பிறகு இயக்குநரை சந்திக்க வாய்ப்பு வழங்கியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, இதனபிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் விசில் போடு என்ற பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனது 69வது படத்துடன் கடைசி என தெரிவித்துள்ள விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அவர் களமிறங்க உள்ளார்.

இதற்கிடையே, இயக்குநர் தரணி நடிகர் விஜய்யை சந்திக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் விஜய் சில காரணங்களால் அதை தவிர்த்து இருக்கிறார். ஏனென்றால், தரணி தன்னிடம் கேட்டால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது என்ற சங்கடத்தில் விஜய் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இப்போது கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி சக்கை போட்டு வசூலை வாரி குவித்து வருகிறது.

இதனையடுத்து, தரணியை சந்திக்க விஜய் நேரம் ஒதுக்கியுள்ளார். அதனை தொடர்ந்து, இந்தப் படத்தின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் மற்றும் தரணி இருவரும் விஜய்யை பார்க்க சென்றிருந்தனர். அப்போது, இவர்களுடன் விஜய் மகிழ்ச்சியாக பேசிய நிலையில் தரணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் சால்வை அணிவித்தார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

shyamala

Next Post

அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு! உன்னிப்பாக கண்காணித்து வரும் மத்திய அரசு..

Tue Apr 30 , 2024
இந்தியாவில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகம், அமெரிக்காவில் பதிவான வழக்குகளுக்குப் பிறகு பறவைக் காய்ச்சல் நிலைமையை தினமும் மதிப்பாய்வு செய்கிறது; பொது சுகாதார ஆபத்து தற்போது குறைவாக இருப்பதாக WHO கூறுகிறது. அமெரிக்காவில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது A(H5NI) சில வழக்குகள் பதிவாகிய பிறகு, மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறது, இது திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இருப்பினும் உலக சுகாதார அமைப்பு பொது […]

You May Like