நடிகர் விஜய்யுடன் டேனியல் பாலாஜி பைரவா மற்றும் பிகில் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். பைரவா படத்தில் நடிக்கும் போது விஜய் சொல்லியும், அதை மீறி தான் ஒரு விஷயத்தை செய்தேன் என டேனியல் பாலாஜி த்ரோபேக் பேட்டியில் பேசியதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். நல்ல மனிதராகவும் யாருக்கும் எந்தவொரு பிரச்சனையும் கொடுக்காமல் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டு ஈடுபட்டு வந்த டேனியல் பாலாஜி நடிகராக வேண்டும் என்பதை விட இயக்குநராக வேண்டும் என்றே ரொம்பவே ஆசைப்பட்டு இருக்கிறார்.
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான டேனியல் பாலாஜி தனியாக படங்களை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், கடைசி வரை அவரது கனவு அந்த விஷயத்தில் நனவாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், மற்ற இயக்குநர்களுக்கு அவர்கள் பணியாற்றும் படங்களுக்கு அசோஷியேட் டைரக்டர் ரேஞ்சுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்தில் முதல் பத்து நிமிடங்கள் காட்டப்படும் ரயில் விபத்துக் காட்சியில், கோர முகத்துடன் விபத்தானது போல காட்டப்படும் அட்களுக்கு மேக்கப் போட்டதே இவர் தான் என்றும் கூறுகின்றனர்.
விஜய்யின் ’பைரவா’ படத்தில் கோட்டை வீரன் கதாபாத்திரத்தில் நடித்து வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார் டேனியல் பாலாஜி. மெயின் வில்லனாக ஜகபதி பாபு நடித்திருப்பார். அவருடைய ஏவல் ஆளாக டேனியல் பாலாஜி நடித்திருப்பார். அதன் பின்னர் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே வில்லனாக வந்தாலும், கடைசியில் தனது மகனை ஃபுட்பால் கோச்சிங்கிற்கு சேர்க்க விஜய்யிடம் வரும் காட்சியில் எல்லாம் கலக்கியிருப்பார்.
முகத்தில் வந்து விழும் அளவுக்கு நீண்ட முடியுடன் மிரட்டி வந்த டேனியல் பாலாஜியை இயக்குநர் பரதன் பைரவா படத்தில் மொட்டையடித்து நடிக்க வேண்டும் என சொல்ல, அதை கேட்ட நடிகர் விஜய் அதெல்லாம் வேண்டாம். இதனால், உங்களுக்கு மத்த படம் பாதிக்கப் போகிறது என சொன்னார். கடைசி நாளில் கூட அதெல்லாம் முடியாது என இயக்குநரிடம் சொல்லிடுங்க என்றார். ஆனால், அந்த கதாபாத்திரத்துக்கு மொட்டையடித்தால் தான் சரியாக இருக்கும் என இயக்குநர் ஃபீல் செய்யும் போது, விஜய்யின் பேச்சைக் கூட கேட்காமல் மொட்டையடித்து நடித்தேன் என டேனியல் பாலாஜி பேசியிருப்பது சினிமா மீது அவர் கொண்ட தீராத காதலை காட்டுகிறது.
Read More : மக்களே உஷார்..!! இந்த நம்பரில் இருந்து ஃபோன் வந்தா எடுக்காதீங்க..!! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!