தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சின்னகூடுரு மண்டலம் உக்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு, சரிதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், சுரேஷை அதே ஊரை சேர்ந்த மாமன் மகளான சந்தியா காதலித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான சந்தியா இதுகுறித்து சரிதாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கணவர் சுரேஷுக்கும் – சந்தியாவுக்கும் உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் மனைவி சரிதா திருமணம் செய்து வைத்தார்.
இதுகுறித்து சரிதா கூறுகையில், ”மாற்றுத்திறனாளியான சந்தியா தனது கணவரை விரும்புவதாகவும், அதனால் மனிதாபிமானத்துடன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாற்றுத்திறனாளியான சந்தியாவை நல்லப்படியாக பார்த்து கொள்ளவே கணவருக்கு திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருவதாக கூறினார்.
Read More : ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை..!! அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்..!!