fbpx

கணவருடன் கருத்து வேறுபாடு..!! விவகாரத்து முடிவா..? முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரம்பா..!!

பிரபல நடிகை ரம்பா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ரம்பா. பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். புகழின் உச்சத்தில் இருந்தபோதே, 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இலங்கை தமிழரான இவர், மிகப்பெரிய தொழிலதிபர்.

திருமணத்துக்குப் பிறகு தம்பதி இருவரும் துபாயில் செட்டில் ஆகிவிட்டார்கள். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகிய நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு வெடித்தது. ரம்பாவை அவரது கணவர் விவாகரத்து பெற உள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் ரம்பா. அதில், 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையைத் தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என ரம்பா குறிப்பிட்டிருந்தார். ஆனால், ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரியிருந்தார் இந்திரன்.

இறுதியில், நீதிமன்றம் இதில் தலையிட்டு அறிவுறுத்தியதை அடுத்து, தம்பதியிடையே உள்ள பிரச்சனையை சமரச மையத்தில் பேசி தீர்த்து வைக்கப்பட்டது. மனைவி ரம்பாவுடன் சேர்ந்து வாழ இருப்பதாக கணவர் இந்திரன் பத்மநாதன் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. அதற்கு பிறகு தம்பதி இருவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தம்பதி விவாகரத்து பெறப்போவதாக மீண்டும் செய்திகள் கசிய துவங்கின. உடனடியாக இதுகுறித்து ரம்பா பதிலளித்துள்ளார். அதில், “நானும் என் கணவரும் விவாகரத்து பெற இருப்பதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய். கணவன்-மனைவி என்றால் சண்டை இருப்பது சாதாரண ஒரு விஷயம் தான் அதை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. நாங்கள் எங்கள் குழந்தை வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Read More : தாய்மாமன் மகளை 4-வது மனைவியாக்கிக் கொண்ட நடிகர் பாலா..!! இம்முறை நம்புவதாக பேட்டி..!!

English Summary

Popular actress Ramba, who is going to divorce her husband, has created a sensation, now she has given an explanation.

Chella

Next Post

8 நாட்களில் 100க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்..!! - வதந்திகளை பரப்பும் 'X' கணக்குகள் முடக்கம்!!

Wed Oct 23 , 2024
Centre blasts X after bomb threats to over 100 flights, asks them to use AI solutions to block accounts

You May Like