fbpx

CSK-க்கு பேரிடி!… நாளைய போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!… நாடு திரும்புவதால் சிக்கல்!

CSK VS RCB: நாளை நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் இருந்து சிஎஸ்கே வீரர் மொயின் அலி விலகவுள்ளார்.

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நாளை (மே 18) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், ஒருபுறம் இவ்விரு அணிகளுக்கான போட்டியின்போது, இரவு 8 மணி முதல் 11 மணி வரை 80 சதவிகிதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தற்போதே கவலையடையத் தொடங்கி உள்ளனர்.

மறுபுறம் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உள்ள மொயின் அலி நாளைய போட்டியில் இருந்து விலகவுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரருக்காக மொயின் அலி நாடு திரும்பவுள்ளார். இருப்பினும், ஒருவேளை நாளைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்குள் சென்றுவிட்டால் மொயின் அலி இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே பதிரனா, தீபக் சஹர், முஸ்தஃபிசூர் ரகுமான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: ஆண்களே!… டூ விலர் பயணத்தால் ஏற்படும் ஆபத்து!… ரத்த ஓட்டத்தை குறைத்து ஆண்மையை பாதிக்கும்!

Kokila

Next Post

அடடே சூப்பர்..!! பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை..!! என்னென்ன வசதிகள் உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா..?

Fri May 17 , 2024
பெங்களூருவில் இயங்கி வரும் அனக்கின் (Anakin) ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ”பிரேக்பாஸ்ட் + லஞ்ச் + சம்பளம்” வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பெங்களூருவில் தான் இயங்கி வருகின்றன. அப்படியாக அனக்கின் (Anakin) எனும் ஐடி நிறுவனமும் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், இந்நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு […]

You May Like