fbpx

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டுபிடிப்பு!… கால்நடை துறை எச்சரிக்கை!

கேரள கோழிக்கோடு மாவட்டத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றிகளின் உடலில் இருந்து ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். தற்போது கேரளாவில் நிபா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு பகுதியில் அடுத்தடுத்து காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. இதனால் சந்தேகம் அடைந்த கால்நடை துறையினர், உயிரிழந்த பன்றிகளின் உடலில் இருந்து திசுக்களை எடுத்து பரிசோதனைக்காக போபால் அனுப்பி வைத்திருந்தனர். அங்குள்ள ஆய்வுக் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், காட்டுப் பன்றிகள் உயிரிழப்பிற்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் நோயே காரணம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த நோய் மனிதர்களைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என கால்நடை துறையினர் அறிவித்துள்ளனர்.

இதே போல், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததற்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவலே காரணமாக இருந்தது. தற்போது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் ஜனகிக்காட் பகுதியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால், வனப்பகுதியில் இந்த நோயை மேலும் பரவாமல் தடுக்க, வனத்துறையுடன் இணைந்து கால்நடை துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Kokila

Next Post

மணியை கடித்த ரவீனா..!! இது காதல் கடியா..? காம கடியா..? ஒரே போடாக போட்ட பயில்வான்..!!

Thu Oct 5 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கும் நிலையில், இந்தப் போட்டியை சுவாரசியமாக நகர்த்தி செல்ல புது புது டாஸ்க்குகள், ரூல்ஸுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, எப்போது முதல் வாரம் நாமினேஷன் இல்லாத நிலையில், இந்த சீசனில் 2-வது நாளே நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்திருக்கிறது. இந்த சீசனில் பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. கூல் சுரேஷ் – விஷ்ணு – மாயா ஆகிய மூன்று பேருக்கும் முட்டிக்கொண்டது. […]

You May Like