fbpx

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறீர்களா.? இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்..!

பொதுவாக தண்ணீர் தாகத்திற்காக நாம் கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். தண்ணீர் மட்டுமல்லாது பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் போன்ற திரவங்களை குடிப்பதனால், வயிற்று வலி முதல் கேன்சர் வரை நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

சுத்தமான நீரை பருக வேண்டும் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருக்கும் நீரை குடிப்பதை தவிர்ப்பதும் முக்கியமானதாகும். கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் வீடுகளில் அதே பாட்டில்களை பயன்படுத்தி தண்ணீர் குடித்து வருகிறோம். ஆனால் இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்திய ஆய்வறிக்கையின்படி ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் 2,40,000 மிகவும் சிறிய கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கூறியுள்ளனர். இதில் அடைத்து வைத்திருக்கும் தண்ணீரை குடிக்கும் போது அந்த நானோ துகள்கள் நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் கலக்கும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் இந்த தண்ணீர் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை குடிக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ரத்தத்தில் இந்த நானோத் துகள்கள் கலப்பதால் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்படும் என்றும் தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

தொகுதி பங்கீடு குறித்து I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை...! மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

Sat Jan 13 , 2024
தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி’ (இந்தியா) கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஆன்லைன் வழியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். இக்கூட்டத்தில் கூட்டணியை வலுப்படுத்துவது, தொகுதி பங்கீடு குறித்து வியூகம் வகுப்பது, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து […]

You May Like