fbpx

Disease X!… அடுத்த லாக்டவுன்-க்கு தயாராக இருங்கள்!… நிபுணர்கள் எச்சரிக்கை!…

கொரோனாவை விட மிக ஆபத்தான நோய் X என்ற எதிர்கால தொற்றுநோயால் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு லாக்டவுன் சூழ்நிலைக்கு தள்ளப்படும், எனவே தயாராக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லுநர்கள் ஒரு புதிய தொற்றுநோய் பற்றி எச்சரிக்கை விடுத்தனர். உலகளவில் பல உயிர்களை கொல்லக்கூடிய டிசீஸ் எக்ஸ் எனப்படும் இந்த புதிய வைரஸ் கொரோனா வைரஸை விட 20 மடங்கு கொடியதாக இருக்கும் என்றும் இது மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடும் என்றும் இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கைவிடுத்திருந்தார். இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு எதிர்கால தொற்றுநோய் பட்டியலில் இந்த நோய் எகஸ்-ஐ சேர்த்ததாக அறிவித்தது. இந்தநிலையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷியங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

WHO கூற்றுப்படி, நோய் X என்ற சொல் “மனித நோயை ஏற்படுத்துவது தற்போது அறியப்படாத ஒரு நோய்க்கிருமி. இது ஒரு தீவிரமான சர்வதேச தொற்றுநோயை ஏற்படுத்தலாம். இது ஒரு புதிய வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சையாக இருக்கலாம். இது ஜூனோடிக் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம், இது ஒரு ஆர்என்ஏ வைரஸாக இருக்கலாம்.

இந்த கொடிய தொற்று காடுகளில் உருவாகலாம் என மருத்துவ சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். விலங்குகள் மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். வளர்ந்து வரும் வைரஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும்பாலும் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் வனவிலங்கு வர்த்தகத்தின் விளைவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

WHO “R&D விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பிப்ரவரி 2018-ல் நோய் X ஒரு ‘அறிய முடியாத நோய்க்கிருமி’ என்று அழைக்கப்பட்டது, மேலும் இது எதிர்காலத்தில் தொற்றுநோயை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கோவின் ஒரு நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர், சமீபத்தில் ரத்தக்கசிவு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அனைத்து சோதனை அறிக்கைகளும் எதிர்மறையாக இருந்தன. இது ஒரு புதிய மற்றும் ஆபத்தான வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். மேலும் அந்த பெண் டிஸீஸ் எக்ஸ் நோயாளியாக இருந்தால் என்ன ஆகும் என்று பலவித கேள்விகள் எழுந்துள்ளன.

ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு நோய்க்கிருமி தோன்றினால் அது உலகம் முழுவதும் பரவுவதற்கு நேரம் எடுக்கும். எனவே, இந்த வைரஸ் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் இங்குள்ள எனது நிறுவனத்தைப் போல உலகின் பிற பகுதிகள் இந்த புதிய நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட புதிய உத்திகளை உருவாக்க வேண்டும் என்று பேராசிரியர் Jean-Jacques Muyembe Tamfum கூறினார். அடுத்த நோய் X, எபோலா மற்றும் கோவிட்-19 போன்ற ஜூனோடிக் வைரஸ் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அடுத்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த நேரம் இது. மீண்டும் லாக்டவுனை தூண்டக்கூடிய எதிர்கால தொற்றுநோய் சூழ்நிலைக்கு உலகைத் தயார்படுத்துவது முக்கியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

Kokila

Next Post

இல்லத்தரசியின் வருமானத்தை மாதச் சம்பளமாகவோ அல்லது ஊதியமாகவோ கணக்கிட முடியாது!… கொல்கத்தா உயர்நீதிமன்றம்!

Fri Sep 29 , 2023
விபத்தில் சிக்கிய இல்லத்தரசிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் போது, ​​ஒரு இல்லத்தரசியின் வருமானத்தை மாதச் சம்பளமாகவோ அல்லது ஊதியமாகவோக் கணக்கிட முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பேருந்துக்காக காத்திருந்த போது, ​​கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயமடைந்ததாகவும், இதனால், தனக்கு 50% அளவிற்கு ஊனம் ஏற்பட்டதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த இந்த […]

You May Like