fbpx

கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களும்… அறிகுறிகளும்!… இதை தவிர்க்க சில டிப்ஸ்!

கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அந்தவகையில் இத்தகைய நோய்களை தடுக்கும் சில வழிகளை பார்க்கலாம்.

கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும். இது சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் ஏற்படுத்தும். சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்கள் நம் சரும செல்களை சேதப்படுத்துவதால் சன்பர்ன் ஏற்படுகிறது. பொதுவான அறிகுறிகளாவன தோல் சிவந்து போதல், சிவந்த தோலை தொடும் போது வலி அல்லது எரிச்ச, சோர்வு, லேசான தலைச்சுற்றல். இந்த நோய்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அந்தவகையில் கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் குறுத்தும் அதனை எவ்வாறு தடுப்பது குறித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

கோடைக்காலத்தில் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்ப பக்கவாதம் என்றழைக்கப்படும் இந்நோய் வெயிலில் அதிக நேரம் இருப்பதால் உண்டாகும். பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, மயக்கம், அதிகரித்த இதயத் துடிப்பு அல்லது இதுபோன்ற பிற அறிகுறிகளை அனுபவிக்க நேரிடும். நிலைமை மோசமானால் மரணம் கூட ஏற்படும்.அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதால் உணவுவழி நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதிக சூடான மற்றும் ஈரப்பதமான வானிலை உணவு மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. பல வகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது நச்சுகளுடன் தொடர்பு கொண்ட உணவை ஒருவர் சாப்பிடும்போது ஃபுட் பாய்ஸனிங் என்ற நோய் ஏற்படலாம். வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை ஃபுட் பாய்ஸனிங் ஏற்படுத்துகிறது. இது மிகவும் பொதுவான கோடைகால நோய்களில் ஒன்று.

கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் நீரிழப்பு சிக்கலும் ஒன்று. கடும் வெயில் காரணமாக வியர்வை வடிவில் நிறைய தண்ணீர் மற்றும் உப்புகளை உடலில் இருந்து இழக்கிறோம். உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு இது அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும். பொன்னுக்கு வீங்கி (Mumps)கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான ஒரு நோயாக இது அறியப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் தும்முவது அல்லது இருமுவதால் பிறருக்கு இது பரவுகிறது. இந்நோய் காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பியை பாதிக்கிறது. கடுமையான வீக்கம், வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

சிக்கன்பாக்ஸ் என்பதை சின்னம்மை என்று தமிழில் குறிப்பிடுகிறோம். கோடைக்காலத்தில் இது அதிகம் பரவ கூடியது. சின்னம்மை வருவதற்கு காரணம் வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella Zoster) என்கிற வைரஸ்தான். இது, காற்று மூலமாக, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். கொப்புளங்கள், தோல் அரிப்பு, சிவத்தல், காய்ச்சல், பசியின்மை மற்றும் தலைவலி உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகள். டைஃபாய்டு நீரால் பரவும் நோயாகும். அதிக காய்ச்சல், சோர்வு, பலவீனம், வயிற்று வலி, தலைவலி மற்றும் பசியின்மை ஆகியவை பொதுவான அறிகுறிகள்.

கோடை நோய்களைத் தவிர்க்க சில டிப்ஸ்: நாள் ஒன்றுக்கு சராசரியாக 10-12 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துங்கள். தண்ணீர் அத்தவிர இளநீர், மோர் மற்றும் லெமன் ஜூஸ் போன்ற திரவ உட்கொள்ளலை அதிகரிக்கவும். பருத்தி ஆடையை அணிந்து வெளியே செல்லுங்கள். கூடுமானவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். தர்பூசணி, வெள்ளரி, கரும்பு மற்றும் மாம்பழம் போன்ற பழங்கள் மற்றும் நிறைய காய்கறிகளை சாப்பிடுங்கள். வெளியே செல்லும் போது சன்கிளாஸ் மற்றும் கேப் அணிந்து கொள்ளுங்கள்.

Kokila

Next Post

உலகளவில் 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. WHO வெளியிட்ட தகவல்.

Wed Apr 5 , 2023
உலகளவில் 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கமான உடலுறவுக்குப் பிறகு கர்ப்பம் அடையவில்லை எனில் அது மலட்டுத்தன்மை என்று கருதப்படுகிறது.. பெண்களை போன்றே ஆண்களும் மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்நிலையில் மலட்டுத்தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில்” உலகளவில் சுமார் 17.5 சதவீதம் […]

You May Like