பல்வேறு நோய்களுக்கு பிரதான தீர்வாக உள்ள தும்பையில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்துகொள்வோம்.
தும்பைப் பூவைப் பறித்து விளையாடிய நம்மில் பலருக்கும், அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவலி, சளி, மூக்கில் சதை வளர்ச்சி என அனைத்துப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக தும்பை இருக்கும். பாட்டி வைத்தியத்தில் தும்பை இலையை சாப்பாட்டில் சேர்ப்பது. ஆவி பிடிப்பது, தும்பை பூ போட்ட நல்லெண்ணெய்யை தேய்ப்பது எல்லாம் முக்கிய பழக்கவழங்கங்கள். மழைக்காலம் வந்தாலே இந்த தும்பை வைத்தியங்கள் தான் பிரதானமான இன்னும் பல வீடுகளில் இருக்கிறது. தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள் அளப்பரியது. இதுபற்றி பார்ப்போம்.
சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம். தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் அசைவ உணவுகள் உப்பு, புளி, சேர்க்கக் கூடாது. காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள்.
நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும்.தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.