fbpx

திடீரென முடங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார்…! கொந்தளிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!!!

உலகளவில் அதிகமானோரால் பார்க்கப்படும் ஓடிடி தளங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரும் ஒன்று. புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் இதில் காணலாம். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாட்ஸ்டாரில் இன்று ஒளிபரப்பட்டு வந்தது, அப்போது திடிரென்று ஹாட்ஸ்டார் சேவை டிவி, போன்,லேப்ப்டாப் உள்ளிட்ட அனைத்திலும் முடங்கியதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான அபிநவ் முகுந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “இந்த பிரச்சனை எனக்கு மட்டும் வருகிறதா, இல்லை ஒட்டுமொத்த ஹாட்ஸ்டார் சேவையும் முடங்கியதா” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பலரும் தங்கள் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் ஹாட்ஸ்டார் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து ஹாட்ஸ்டார் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Kathir

Next Post

அக்னி வீரர்கள் தேர்வு..!! மார்ச் 15ஆம் தேதி வரை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Fri Feb 17 , 2023
இந்திய ராணுவத்திற்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறை சமீபத்தில் மாற்றப்பட்டது. அதன்படி, இறுதியில் நடத்தப்படும் பொதுத்தேர்வை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் நுழைவு தேர்வு, அதன் பின் உடற்தகுதி தேர்வு, மூன்றாவதாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், திருத்தப்பட்ட முறைப்படி அக்னி வீரர்கள் தேர்வு செய்வதற்காக ராணுவத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் […]

You May Like