மனைவி , கணவரையும் அவரது குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பது கணவனுக்கு எதிரான கொடுமை தான் என்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவருக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் மேல்முறையீடு செய்துள்ளார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நீதிபதிகள் ஷீல் நாகு மற்றும் நீதிபதி வீரேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது கணவர் தான் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு அளித்ததாகவும், குடும்ப நல நீதிமன்றமானது கணவர் தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு ஒருதலையாக தீர்ப்பு வழங்கியதாகவும் அந்த பெண்ணின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து மனைவியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக, அந்த பெண் காவல்துறை உயர் அதிகாரியின் மகள் அவர் திருமணம் ஆன புதிதில் இருந்தே எங்களை என்னையும், எங்கள் குடும்பத்தாரையும் மதித்தது இல்லை. என்றும், தற்பெருமை, திமிர், பிடிவாத குணம் கொண்டவர் என்றும், குறுகிய மனப்பான்மை கொண்டவர், பாசாங்கு கொண்டவர் என்றும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களை அவமதித்து வந்ததாகவும் கணவர் தரப்பில் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு,டும்ப நீதிமன்றம், ஒவ்வொரு அம்சத்தையும் நன்கு ஆலோசித்து, மிக நீண்ட தீர்ப்பில், கணவன் மற்றும் அவரது சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பகமானவை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதே நேரத்தில் மனைவியின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறியது.
மேலும் விசாரணையில், ‘ மனைவி, கணவரையும் அவரது முழு குடும்பத்தையும் அவமரியாதை செய்வதை காட்டுகிறது. குறுக்கு விசாரணையிலும் அந்த குற்றசாட்டு அப்படியே நிரூபணமானது. என்றும், மனைவி , கணவர் குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பது கணவனுக்கு எதிரான கொடுமை தான் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.இதனை தொடர்ந்து குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட உயர்நீதிமன்றம் மறுக்கிறது என்று கூறி மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது.