fbpx

மனமுடைந்து வந்த கணவர் விராட்..!! கட்டியணைத்து ஆறுதல் கூறிய மனைவி அனுஷ்கா..!!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாகவும், தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இறுதியாக டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி உள்பட 4 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மார்னஷ் லபுஷேன் 58 ரன்கள் எடுக்க, மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்து வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இந்தியா முக்கியமான போட்டியான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஒட்டுமொத்த 130000 ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளனர்.

இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், வெளியேறிய விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய கோலி 765 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து தொடர் நாயகன் விருது பெற்றார்.

Chella

Next Post

கேப்டன் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் பொருத்தம்..!! மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Mon Nov 20 , 2023
தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கிடையே, உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் திடீரென உடல்நலக்குறைவு […]

You May Like