fbpx

அதிர்ச்சியில் மாவட்ட, மாநில நிர்வாகிகள்..!! இறங்கி அடிக்கும் உதயநிதி..!! பதற்றத்தில் இளைஞரணி..!!

திமுக இளைஞர் அணியினரின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை அன்பகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் முடிந்த நிலையில், கட்சிப் பணிகளில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே, இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளின் மீது வந்த புகார்கள் குறித்து அவர்களிடமே விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன நிர்வாகிகளிடம், தேர்தல் முடிவு வெளியானப் பிறகு பலரது பதவிகள் பறிக்கப்படுமென அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக, இளைஞரணியின் புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல வாரியாக அறிந்து கொள்ளும் நோக்கில், சென்னை உட்பட முதல் மண்டலம், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் அடங்கிய 2-வது மண்டலத்துக்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் வெளியாகும் முடிவுகள் அடிப்படையில், சரியாக செயல்படாத நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதே கருத்து இளைஞரணியிலும் எதிரொலித்துள்ளது.

Read More : வெறும் 2 மாவட்டங்களை கொண்ட இந்திய மாநிலம் எது தெரியுமா..? பலருக்கும் இது தெரியாது..!!

Chella

Next Post

காலநிலை மாற்றம் மூளையை பாதிக்கும்!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Mon May 20 , 2024
Climate Change: ஒற்றைத் தலைவலி மற்றும் அல்சைமர் போன்ற மூளை நிலைகள் உள்ள நபர்களின் ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லான்செட் நியூராலஜி இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில், தீவிர வெப்பநிலை, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும், அதே போல் நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள், காலநிலை மாற்றத்தால் இயக்கப்படும், மூளை நோய்களை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு […]

You May Like