நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் மாவட்ட திமுகவினர் பா.ஜ.க.வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் லத்தேரியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிகாரப்பூர்வமாக இது தேர்தல் சம்மந்தப்பட்ட கூட்டம இல்லை என்றாலும் கூட இதில் சில விஷயங்கள் தேர்தல் பற்றி பேசப்பட்டது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஜெகத் ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், பா.ஜ.க. பூதமாக உருவெடுத்து வருகின்றது. பணம் அதிகாரம் பலத்தோடு அதனை நாம் முறியடிக்க நாம் வாக்குச்சாவடி குழுக்களை வலுவாக அமைக்க வேண்டும் என்றார்.
மேலும், எது எப்படி வந்தாலும் அதனை நாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அதகாரிகளும் பயப்படுவார்கள் மத்திய அரசும் பயப்படும் அதற்கு பின் நம்மிடம் அவர்கள் பேசுவார்கள். இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்க்க போகின்றோம். என அவர் பேசினார்.