தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த சத்யா, தேனி மாவட்டச் செயலாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோதே இயக்கத்திற்காகவும், தற்போது கட்சிக்காகவும் கடந்த 7 வருடங்களாக உழைத்து வரும் தனக்கு பொறுப்பு வழங்கக் கூடாது என மாவட்ட செயலாளர்கள் தன் மீது குற்றம் சுமத்துகின்றனர். (சமீபத்தில் தான், தவெகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக பாண்டியும், தேனி வடக்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் என்பவரும் நியமிக்கப்பட்டனர்)
தவெக பெண் நிர்வாகி சத்யா பேசிய பரபரப்பு வீடியோ : https://twitter.com/i/status/1886282924061766048
இரண்டு மாவட்டச் செயலாளர்களும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது உறவினர் பெண் மூலம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் தன் மீது 4 வழக்குகள் உள்ளதாகவும், தனக்கு மகளிர் அணி பொறுப்பாளர் பதவி வழங்கக் கூடாது என்றும் தவறான தகவல்களை கூறியுள்ளதாக சத்யா தெரிவித்துள்ளார்.என தவறான தகவல்களை கூறியதாக தெரிவித்தார். தவெக தலைவர் விஜய்க்கு இங்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிவதில்லை. இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் பாண்டி, மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார். தேனி மாவட்ட செயலாளர்கள் மீது பெண் நிர்வாகி சத்யா குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், தற்போது பாண்டி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.