fbpx

இந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை இல்லை..! பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்!… ஆட்சியர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று அதி கனமழை எனப்படும் 25 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை (பள்ளிகளுக்கு மட்டும்) மற்றும் திருவள்ளுர் (பள்ளி மற்றும் கல்லூரி) இன்று (நவம்பர் 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை குறித்து அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாகும் நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்துவருதாகவும், இருப்பினும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Kokila

Next Post

வாக்காளர் சேர்க்கை முகாம் தேதி மாற்றம்...! மீண்டும் எப்பொழுது நடைபெறும்...? புதிய தேதி அறிவிப்பு...!

Wed Nov 15 , 2023
வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19 ஆம் தேதிக்கு பதிலாகநவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள். நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in […]

You May Like