fbpx

தீபாவளி போனஸ் அறிவிப்பு!… இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு தான்!… யார் யாருக்கு எவ்வளவு?

சி பிரிவு & கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குறிப்பிட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி சமயத்தில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே இருப்பதால், போனஸ் எப்போது வழங்கப்படும் என்று ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.

அந்தவகையில் முதற்கட்டமாக சி பிரிவு & கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் வழங்கப்பட உள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்த விரிவான அறிக்கையும் மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போனஸ் தொகை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.

Kokila

Next Post

சென்னையில் மேலும் ஒரு சுங்கச்சாவடி மூடப்படுகிறது..!! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

Wed Oct 18 , 2023
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. டோல் பிளாசாவில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உள்ளூர் குடியிருப்போர் சங்கங்கள் பல கோரிக்கை வைத்தன. இங்கே பயணம் செய்யும் மக்கள் பலரும் பல காலமாக இதே கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். அவர்களின் […]

You May Like