fbpx

தீபாவளியால் வெறிச்சோடிய சாலை..!! அதிவேகமாக வந்த கார்..!! சின்னத்திரை நடிகரின் மகன் மரணம்..!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் நிதிஷ். இவர், தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று தீபாவளியை வீட்டில் கொண்டாடி விட்டு, மாலை தனது நண்பர்களுடன் கொண்டாட ஓஎம்ஆர் சாலையில் உள்ள விளையாட்டு திடலுக்கு சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கார் வேளச்சேரி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி மொத்தமா நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த நிதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நிதிஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நிதிஷின் நண்பர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று விடுமுறை தினம் என்பதால், சாலையில் பெரிய அளவில் வாகனம் இல்லை. இதனால், நிதிஷ் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து நிதிஷின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீபாவளி நாள் அதுவும் சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

Read More : ”அம்மா வெளியே போனதும் நீ உள்ள வா”..!! +1 மாணவியுடன் கானா பாடகர் உல்லாசம்..!! போலீசில் பலாத்கார நாடகம் ஆடியது அம்பலம்..!!

English Summary

Doctors who examined Nitish said he was already dead. Nitish’s two friends have been admitted to the Rayapete Government Hospital with serious injuries.

Chella

Next Post

"தமிழ்நாடு நாள்" த.வெ.க‌ தலைவர் விஜய் போட்ட டுவிட்...! குஷியில் தொண்டர்கள்...!

Fri Nov 1 , 2024
Tvk President Vijay has extended his greetings on the occasion of Tamil Nadu Day.

You May Like