fbpx

தீபாவளி பண்டிகை..!! அசத்தும் ஆவின் நிறுவனம்..!! சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை..!! என்னென்ன தெரியுமா..?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் காக்களூர் பால் பண்ணையின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நெய் மைசூர்பா, நெய் லட்டு, காஜு கட்லி, பாதாம் அல்வா, கோவா, மில்க் கேக் ஆகிய சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

சுத்தமான ஆவின் நெய்யால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ள இந்த இனிப்பு வகைகள் தரத்தில் உயர்ந்தவை ஆகும். இந்த இனிப்பு வகைகள், 3 மாவட்டங்களில் உள்ள ஆவின் பாலகம், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை முகவர்கள் மூலம் கிடைக்கும்.

மேலும், மொத்த ஆர்டர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. ஆகவே, மொத்த ஆர்டர்களுக்கு திருவள்ளூர் – 9894263351, காஞ்சிபுரம் – 9488731298, செங்கல்பட்டு – 9445695275 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது..!! கணவரின் மனு தள்ளுபடி..!! உயர்நீதிமன்றம் அதிரடி..!!

Thu Oct 26 , 2023
பட்டதாரி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தம்பதியினர் அண்மையில் விவாகரத்து பெற்றனர். அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. விவாகரத்து பெற்றதால், மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் மாதந்தோறும் ரூ.25,000 வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வலியுறுத்தி, டெல்லி ஐகோர்ட்டில் கணவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது […]

You May Like