fbpx

தீபாவளி பண்டிகை..!! இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இன்று நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நவ.9, 10, 11 ஆகிய நாட்களில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் 2 வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை). 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Chella

Next Post

மனைவிகளை சிங்கிள் பசங்களுடன் உல்லாசத்திற்கு அனுப்பிவைத்த கணவர்கள்..!! சென்னையை அலறவிட்ட ஸ்வாப் பார்ட்டி..!!

Thu Nov 9 , 2023
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், கணவன் மனைவி என கூறி பிறந்தநாள் பார்ட்டி செய்ய போவதாக 8 தம்பதிகள் ஆன்லைன் மூலமாக அறைகளை புக் செய்துள்ளனர். நீச்சல் குளத்தோடு சேர்ந்த பண்ணை வீட்டினை சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். சனிக்கிழமை கணவன் மனைவி என கூறிக் கொண்டு எட்டு தம்பதிகளும், அவர்களுடன் சிங்கில்ஸ் 10 பேரும் வந்துள்ளனர். சனிக்கிழமை […]

You May Like