fbpx

தீபாவளி பண்டிகை..!! புதுச்சேரியிலும் வந்தது புதிய கட்டுப்பாடு..!! மக்களே கவனம்..!!

தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இந்தாண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

செம திட்டம்...! மாதம் ரூ.25,000 முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை...! TRB இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

Fri Nov 3 , 2023
தமிழக கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கலை, மனிதநேயம், சமூக அறிவியல் பிரிவில் 60 மாணவர்களுக்கும், அறிவியல் பிரிவில், 60 மாணவர்களுக்கும் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாதம் ரூபாய் 25,000 […]

You May Like