fbpx

நெருங்கும் தீபாவளி..!! சொந்த ஊருக்கு ரயிலில் போறீங்களா..? தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பை பாருங்க..!!

தமிழ்நாட்டில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால், ரயிலில் பயணம் செய்ய பலரும் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அனைத்து ரயில்களிலும் 200 க்கும் மேல் வெயிட்டிங் லிஸ்ட் உள்ளது. இதனைத் தொடர்ந்து 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு ரயில்களில் பண்டிகைக்கு சென்று வர பொருத்தமான ஓரிரு நாட்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

அதே சமயம் கூடுதல் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் முன்பதிவு இல்லாத ரயில் இயக்குவது தொடர்பாக ஆலோசனை முடிவு எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Chella

Next Post

இந்த 5 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! உங்க ஊரும் இருக்கா..?

Tue Nov 7 , 2023
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, […]

You May Like