fbpx

நெருங்கும் தீபாவளி..! பட்டாசு கொண்டு செல்ல தடை..! மீறினால் ஜெயில்..! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை..!

ரயில்களில் தடையை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ரயில்களில் பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தடை அமலில் உள்ளது. ஆனாலும், தீபாவளி பண்டிகை நெருங்கும்போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசுகளை மறைத்து எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி, ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுப்பதற்காக ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். அதேபோல், இந்த ஆண்டும் கண்காணிப்பு பணிகள் நடைபெறும்.

நெருங்கும் தீபாவளி..! பட்டாசு கொண்டு செல்ல தடை..! மீறினால் ஜெயில்..! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை..!

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், ”ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிமருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. தடையை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு எடுத்து செல்பவர்கள் முதல்முறையாக பிடிபட்டால் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். அதன்பிறகும் தொடர்ந்து இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். பட்டாசு எடுத்து செல்வதை தடுக்க பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனையிடப்படும். மேலும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உள்ளோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

வரும் 27-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை.. வானிலை மையம் தகவல்...

Fri Sep 23 , 2022
தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை தமிழகம், […]

You May Like