fbpx

தீபாவளி ஜாக்பாட்!… நாடுமுழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!… பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடுமுழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதாவது, பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானிய விநியோகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் நாளை முதல் இலவச பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒருபகுதியாக சத்தீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறினார். மேலும், தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் இன்று முதல் இலவச பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் நுகர்வோர்களுக்கு வழங்க தமிழக அரசு உணவுப்பொருட்கள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

Kokila

Next Post

அடடா!… தலைக்கு குளிக்கும்போது முடி ஏன் நீளமாக இருக்கிறது?… இப்படியொரு சுவாரஸ்யம் இருக்கா?

Sun Nov 5 , 2023
கூந்தல் நம் அழகை மேம்படுத்துகிறது. அதனால்தான் நாம் முடி விஷயத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை. மேலும் முடியின் மீது காதல் அதிகம். ஆனால் மனித முடியைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் முடி பற்றிய பல தவறான எண்ணங்கள் நீங்கும். அப்படியானால், நம் தலைமுடி பற்றிய நமக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை இப்போது தெரிந்து கொள்வோம். நம் […]

You May Like