fbpx

தீபாவளி..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக, சென்னையில் இருந்து அக்டோபர் 21 – 23 வரையிலும், அக்டோபர் 25 – 27 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 24ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (எஸ்.இ.டி.சி) சென்னையில் 6 இடங்களில் இருந்து மாநிலம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பிற மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லவும் பண்டிகை முடிந்த பிறகு, மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதற்கு வசதியாக சென்னையில் இருந்து அக்டோபர் 21 – 23 வரையிலும், அக்டோபர் 25 – 27 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தீபாவளி..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்முடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

சென்னையில் இந்த ஆறு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல பயணிகளுக்கு வசதியாக இணைப்புப் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்ட நிலையில், ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உயர்ந்ந்துள்ளது. இதனால், மக்கள் அரசுப் பேருந்துகளை புக்கிங் செய்து வருகின்றனர். அதன்படி இன்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது.

Chella

Next Post

’வீட்டில் கடன் பிரச்சனை’...!! வேலைக்கு சென்ற மனைவியை குடிபோதையில் கொடூரமாக தாக்கிய கணவன்..!!

Thu Oct 20 , 2022
கடன் பிரச்சனையை சமாளிக்க வேலைக்கு சென்ற மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டில் கடன் பிரச்சனை காரணமாக இவரது மனைவி அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனால், அதற்கு அவருடைய மனைவி மறுப்பு […]
’வீட்டில் கடன் பிரச்சனை’...!! வேலைக்கு சென்ற மனைவியை குடிபோதையில் கொடூரமாக தாக்கிய கணவன்..!!

You May Like