சென்னை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிடிக்கப்பட்ட போதை கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மெத் எனப்படும் போதை பொருளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பல் நேற்று கைது செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிபட்ட 3 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்திருக்கிறது. இந்த கும்பல் போதை மருந்து கடத்தலில் 2000 கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மேலும் இந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது சென்னை மேற்கு மாவட்ட திமுக வின் அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக் என காவல்துறையை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறார். இந்த ஜாபர் சாதிக் மாயவலை மற்றும் மங்கை போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
இவரது தலைமையிலான கும்பல் மெத் போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளோடு கலந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி போலீசார் போதை கும்பலை கைது செய்துள்ளனர்.