fbpx

’என்னை பார்த்தாலே திமுகவுக்கு பயம்’..!! ’இனிதான் ஆட்டமே இருக்கு’..!! பரபரப்பை கிளப்பிய குஷ்பு..!!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை பாஜக அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நான் பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் ஒன்றுதான். ஒரு பொறுப்பில் இருக்கும் போது கட்சி சார்பாக இயங்க முடியாது. கமலாலயத்திற்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் நான் வந்திருக்கிறேன்.

பாஜகவுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்கு இருக்கிறது. ஆனால், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியால், தேசிய அளவிலும் தமிழ்நாட்டில் நடக்கும் டிவி விவாதங்களிலும் என்னால் பங்கேற்க முடியவில்லை. இப்போது நான் ஃப்ரீயாகிவிட்டேன். இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து விலக எனக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.

என் பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்தான். கட்சி பணிகளில் இல்லாத போதே நான் நிறைய பேசியிருக்கேன். இப்போது கட்சி சார்பில் பேசினால் எப்படியெல்லாம் பேசுவேன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அந்த பயம் இருக்கட்டும். மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கும். அந்த பயத்தால்தான் திமுகவினர் பேசி வருகின்றனர். பேசட்டும். இனிதான் விளையாட்டே ஆரம்பிக்க போகுது” என்று அதிரடியாக பேசியுள்ளார் குஷ்பு.

Read More : Bigg Boss Season 8இல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்..!! அட இவர்களுமா..? வெறித்தனமா இருக்கப் போகுது..!!

English Summary

DMK gets scared when they hear my name. I have spoken a lot when not on party work.

Chella

Next Post

ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள்..!! பயணிகள் அதிர்ச்சி

Thu Aug 15 , 2024
Ahmedabad-Mumbai Double Decker Train Coaches Get Detached From Engine Near Surat

You May Like