செயலற்ற விடியா திமுக அரசைப் போல் இல்லாமல், மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அதிமுக உழைக்கும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் #RapidReponseTeam அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நின்றது.
தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க. உழைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ”எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ பிடிக்கலன்னு சொல்ற”..!! கழட்டிவிட்ட காதலன்..!! கதறும் இளம்பெண்..!!