fbpx

தொடை நடுங்கி திமுக அரசு..!! திடீர் போராட்டத்தை முன்னெடுத்தால் என்ன பண்ணுவீங்க..? பாஜக நிர்வாகிகள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்..!!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்..? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டுமென அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயாராக இருந்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அதேபோல், பல மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் வினோத் பி.செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்ட அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்..?” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : TCS நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா..? அப்படினா இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Annamalai has raised the question, “What can you do if you suddenly launch a protest without announcing a date?”

Chella

Next Post

அமெரிக்காவை சூறையாடிய சூறாவளி மற்றும் காட்டுத்தீ.. இதுவரை 37 பலி பலி..!!

Mon Mar 17 , 2025
Devastating weather sweeps US, leaving 37 dead amid tornadoes, wildfires and dust storms

You May Like