fbpx

’திமுக அந்த மாதிரி கட்சி’..!! ’நாம் தமிழர் கட்சியில் இணைந்தது ஏன்’..? பிக்பாஸ் அசீம் பரபரப்பு பேட்டி..!!

திமுகவில் இருந்து விலகிய பிக்பாஸ் அசீம், நாம் தமிழர் கட்சியின் ஶ்ரீபெரும்புதூர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பல்வேறு இடங்களில் அசீம் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், தனியார் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில், “என்னுடைய அப்பா, தாத்தா எல்லோரும் திமுகவுக்கு தான் ஆதரவு. நானும் முதலில் திமுகவுக்கு ஆதரவாக தான் இருந்தேன். படிக்கிற காலத்தில் திமுகவின் கொள்கை மீது ஒரு பிடிப்பு இருந்தது.

பின்னர், அரசியலில் புரிதல் வந்த பிறகு தான் திமுகவின் இரட்டை வேடம் தெரிந்தது. ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாதிரியும், ஆட்சியில் இல்லாத போது வேறு மாதிரியும் இருந்தனர். இலங்கை தமிழர்கள் இறக்கும் போது ஆட்சியில் இருந்த திமுக எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் சீமானின் அரசியலை கவனித்துக் கொண்டிருந்தேன். இப்போது, சீமானின் பாதை சரியாக இருக்கும் என்று அவரது பாதையில் நடக்கிறேன்.

ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எனது நண்பர் என்பதால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். சீரியலில் நடிகரான பின்பு பிக்பாஸ் வந்து வெற்றி பெற்றேன். என்னுடைய பாதை சினிமா என்று நினைத்தேன். ஆனால், அரசியலில் வந்து நிற்கிறேன்” என்றார்.

Read More : அடடே..!! இப்படியும் கூட வாக்களிக்கலாமா..? வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க..!!

Chella

Next Post

சல்மான் கானை நேரில் சந்தித்த மகாராஷ்டிரா முதலமைச்சர்! ஏன் தெரியுமா?

Wed Apr 17 , 2024
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரை நேரில் சந்தித்த மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.  மும்பை பாந்த்ரா பகுதியில் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். கடந்த ஞாயிற்றுக்கிழமை, குறிப்பிட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு முன்பு துப்பாக்கிச்சூடு நடந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர், […]

You May Like